For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் என்ன சொன்னார் என்று ஓபிஎஸ்சிடம் தான் கேட்க வேண்டும்... தமிழிசை மழுப்பல்!

பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் பற்றி கேள்விக்கு மழுப்பிய தமிழிசை- வீடியோ

    சென்னை : பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பிரதமர் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது : காவிரி தீர்ப்பு மன வேதனையை அளிப்பதாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடும்.

    Tamilisai regrets to comment over OPS and PM Modi discussion

    காவிரி உரிமையை பெற சட்ட ஆலோசகர்களை அழைத்து பேசி விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தமிழை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும்.

    தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தோல்வியடைந்து விட்டது. தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் அமைதிப்பூங்காவான தமிழகத்தில் தான் கேக்கை அரிவாளால் வெட்டும் நிலை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் ஓ.பன்னீர்செல்வமும் பேசியிருப்பது அரசியல் சார்ந்த விவகாரம் என்பதால் நான் கருத்துசொல்ல முடியாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

    English summary
    TN BJP state president Tamilisai says that O.Paneerselvam only will explain what he and PM Modi discussed as it is the matter of politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X