அரசியல்வாதிகளுக்கு இணையான கல்வியை ஏழைகள் பெற்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணமா?... தமிழிசை காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகளுக்கு இணையான கல்வியை கிராமத்து ஏழைகள் பெற்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணமா என்று நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பவர்களை தமிழசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tamilisai Soundarrajan condemns those who oppose Navodhaya schools

நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அதை சுட்டிக் காட்டி தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டரில் தொடர் பதிவுகளில் கூறுகையில், கிராமத்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள்40சதவீத அளவுக்குமேல் அனைத்தும் இலவசம் உறைவிடம் உணவு உடை உட்பட !இவர் எதிர்ப்பது ஏன்?

நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரை தமிழ் கட்டாயம்11 ,12 வகுப்புகளில் விருப்ப மொழியாக தமிழ் இந்தி ஆங்கிலம்..எங்கே திணிப்பு? மத்தியரசு 20கோடி நிதி உதவி வழங்கும்.நவோதயாவில் நீட்எழுதிய 14183 பேரில் 11875 பேர் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில்! அரசு பள்ளி 5 பேர் மட்டுமே.

நவோதயா பள்ளிகளை தடுப்பது தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தானா? என்று தமிழிசை தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

BBC Tamil
English summary
Tamilisai condemns those who oppose Navodhaya schools and says that the opposers

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற