For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை.. தமிழக பட்ஜெட்டில் மீண்டும் உயிர்பெறுகிறதா?

இன்று நடக்கும் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடரில், மீண்டும் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: இன்று நடக்கும் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடரில், மீண்டும் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Tamilnadu government may say YES to the lottery ticket in 2018 budget

இந்த நிலையில் இன்று லாட்டரி டிக்கெட்டுக்கு அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய முறையில் மீண்டும் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் கடன் சுமை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற வருட கடன் சுமையே 3 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த வருடம் இன்னும் அதிக அளவில் கடன் சுமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரி டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தும் போது அரசின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். இது கடன்சுமை பெரிய அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழ்மையான வீட்டில் லாட்டரி டிக்கெட் விற்பனையால் நிறைய பிரச்சனை நடக்கிறது என்றே அதன் விற்பனைக்கு தடை வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

English summary
Tamilnadu Dept. CM and Finance minister O.Paneerselvam will submit the state budget 2018 in assembly today. Tamilnadu government may say YES to the lottery ticket in 2018 budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X