தமிழக அரசுக்கு கொள்ளையடிப்பதே கொள்கை - அன்புமணி ராமதாஸ் விளாசல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக அரசு மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் கொள்ளையடிக்கவே திட்டமிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அதை எதிர்த்துப் போராடும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு முன்பு 100 மணல் குவாரிகளை நடத்திக்கொண்டிருந்தது. அந்த மணல் மூலம் மொரிஷியஸ், மாலத் தீவு, கேரளா போன்ற இடங்களில் கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

 Tamilnadu government planned to open many sand quarries said Anbumani Ramdoss

அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சி வழக்குப் போட்டு 27 குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் 70 மணல் குவாரிகளை ஆரம்பிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மணல் குவாரிகள் ஆரம்பிக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடுவோம். தமிழக அரசும் ஆட்சியாளர்களும் கொள்ளையடிப்பதற்காகவே மணல் குவாரிகளை ஆரம்பிக்கின்றனர் என அரசை கடுமையாகச் சாடினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government planned to open many sand quarries and PMK never allow this. And Pmk will protest against this decision said Anbumani Ramdoss
Please Wait while comments are loading...