வெளிமாநில விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பரிசு வழங்க வேண்டாமே: இராச்குமார் கோரிக்கை
சென்னை: விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெரும் பிற மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசு பரிசுகள் வழங்க கூடாது என்று தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர்இராச்குமார் பழனிசாமிகேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு, அவர் விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழர் அல்லாத பலருக்கும் தமிழக அரசு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வழங்கியது. இதில் கேரளாவை சேர்ந்த ஒருவரும், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். கேரளாவை சேர்ந்த தீபிகா பல்லிகல் என்பவருக்கு அப்போது 50 லட்சம் வழங்கப்பட்டது. இப்போது ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு தீபிகாவிற்கு 20 லட்சம் தமிழ்நாட்டு அரசு வழங்குகிறது.
தமிழ்நாட்டு அரசு தமிழர்களுக்கான அரசு என்பதை அரசு மறக்கக் கூடாது. யாருக்கு பரிசு வழங்க வேண்டும், வழங்கக் கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகள் வழங்குவது தான் நியாயமாக இருக்க முடியும். அந்த வகையில் தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத, தமிழகத்தை பூர்வீகமாகக் கொள்ளாத ஒருவருக்கு தமிழக அரசு பரிசுத் தொகையை கொடுப்பது ஏற்புடையதாக இல்லை.
தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், பெற்றோர்களில் ஒருவராவது தமிழராக இருப்பது, தமிழ் மொழியை பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் மொழிப் பாடமாக படித்தவர்கள் என்பது போன்ற தகுதிகளின் அடிப்படையில் வேண்டுமானால் பரிசுகளை வழங்கலாம்.
இதன் அடிப்படையில் பரிசுகள் கொடுப்பதின் மூலமாக தமிழ்நாட்டின் உண்மையான குடிமகனுக்கு விளையாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வெளி மாநில மக்களுக்கு அவர்கள் சார்ந்த அரசுகள் பரிசுகளை வழங்கட்டும், அல்லது இந்திய அரசு வழங்கட்டும். தமிழக அரசு பரிசுத் தொகை வழங்க வேண்டாம். அந்தத் தொகையை தமிழகத்தை சேர்ந்த தமிழர்களின் விளையாட்டு பயிற்சிக்கு அரசு செலவு செய்யலாம்.
அதனால் தயவு கூர்ந்து தமிழக முதல்வர் நாம் வைத்துள்ள பரிந்துரையை ஏற்று விளையாட்டு விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை தமிழகத்தை சேர்ந்த தமிழர்களுக்கே வழங்க ஆவன செய்தல் வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தின் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications