2ம் நிலை கட்சிகளில் அதிக ஓட்டுகள் பெறப்போகும் கட்சி எது?... இப்படியும் நடக்கும் கணக்கெடுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமலின் முதல் அரசியல் மாநாடு | கமல் இனி நடிப்பாரா? | Oneindia Tamil

  சென்னை : ரஜினி கட்சி, கமல் கட்சி, தேமுதிக உள்ளிட்ட 2ம் நிலை கட்சிகளில் அதிக ஓட்டுகள் பெறப்போகும் கட்சி எது என்று நெட்டிசன் ஒருவர் வாக்கெடுப்பு நடத்தி வருகிறார்.

  ரஜினி, கமல் அரசியல் பரபரப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தனது கட்சியின் பெயர் கொடியை அறிமுகம் செய்கிறார் கமல், அதனைத் தொடர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என்று அரசியல்வாதி அரிதாரம் பூச முழு வீச்சில் தயாராகி வருகிறார் கமல்.

  மற்றொருபுறம் ரஜினியின் அரசியல் பயணமும் வேகமெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் மன்ற செயலாளராக லைக்கா நிறுவன முன்னாள் இந்திய தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கம் நியமனம் என்று சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.

  தமிழருவி மணியனுடன் ஆலோசனை

  தமிழருவி மணியனுடன் ஆலோசனை

  சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இன்று தமிழருவி மணியனை வரவழைத்து ரஜினி ரகசிய ஆலோசனையும் நடத்தியுள்ளாராம். அரசியலின் அடுத்த கட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகவும் முழு விவரங்களை ரஜினியே அறிவிப்பார் என்றும் தமிழருவி மணியன் கூறிவிட்டார்.

  அனல் பறக்கும் விவாதங்கள்

  அனல் பறக்கும் விவாதங்கள்

  ரஜினி, கமல் அரசியலை விமர்சித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர். மற்றொரு புறம் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் இவர்களின் அரசியல் வருகை பற்றி விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் சமூகவலைதளவாசிகள் தங்களது பங்கிற்கு வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.

  இப்படியும் கணக்கெடுப்பு

  இப்படியும் கணக்கெடுப்பு

  இரண்டாம் நிலை கட்சிகளில் ஓட்டுகள் பெறப்போகும் கட்சி எது என்று ரஜினி கட்சி, கமல் கட்சி, தேமுகதிக, நாம் தமிழர் உள்ளிட்டவை தேர்வுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்புக்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.

  கமலுக்கே ஆதரவு

  கமலுக்கே ஆதரவு

  இந்த சுவாரஸ்ய வாக்கெடுப்புக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தால் ஷாக்காகிடுவீங்க. 25 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கமல் கட்சிக்கு 43 சதவீதம் பேர் வாக்கு போட்டுள்ளனர்.

  நாம் தமிழர் 3ம் இடம்

  நாம் தமிழர் 3ம் இடம்

  ரஜினி, கமலை விட அரசியலில் நான் சீனியர் என்று சொல்லும் விஜயகாந்த் கட்சிக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழர் பண்பாடு, தமிழ் நாகரிகம் என்று தொடர்ந்து பேசி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகளைப் பெறப்போகும் இரண்டாம் நிலை கட்சிகளில் 3வது இடத்தை பெற்றுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu is gearing up for Rajinikanth and Kamalhaasan politics as days are coser for Kamal;s party announcement here is the interesting voting in twitter.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற