தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில்.... திணறும் அரசு! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 9 நாட்களாக, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. நீதிமன்றம் போராட்டத்துக்கு தடை விதித்த போதும், அத்தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Tamilnadu secretariat employees association also protesting

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு ஊழியர்கள் இன்னும் ஒருமணி நேரத்தில் போரடடத்தைக் கைவிட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu secretariat employees association also extending their support to Jaccto - geo.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற