For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.. தமிழக அரசு பதில் மனு

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது அவர்களது உரிமை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கான பதில் மனுவை இன்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என்று கூறியுள்ளது.

கட்டாயப்படுத்த முடியாது

கட்டாயப்படுத்த முடியாது

மேலும் மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அரசு ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும்.

ஆசிரியர்களின் உரிமை

ஆசிரியர்களின் உரிமை

உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். என்றாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க உரிமையுள்ளது.

அரசுப் பள்ளியில் சேர்ப்பு

அரசுப் பள்ளியில் சேர்ப்பு

தற்போது பல ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயோமெட்ரிக் முறை

பயோமெட்ரிக் முறை

கடந்த 4 ஆண்டுகளில் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராத 910 ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Government school teachers have rights to get admission in private schools, said TN Govt in Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X