மக்களே பாருங்க அநியாயத்தை.. பிரண்டுக்கு அரசு பஸ்சில் டிரைவிங் கற்றுக் கொடுத்த டெம்பரவரி டிரைவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தொடரும் போராட்டம்... தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகள்- வீடியோ

  ஊட்டி: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பனரக வாகனம் ஓட்டும் உரிமம் உள்ளவர்களை தற்காலிகப் பணியாளர்களாக நியமித்து அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. இந்நிலையில் உதகையில் தற்காலிக ஓட்டுனர் ஒருவர் தனது நண்பருக்கு பயணிகள் இருந்த அரசுப் பேருந்தில் பேருந்து ஓட்ட கற்றுக் கொடுத்ததை பார்த்து பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தமானது தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் செய்வதறியாது அரசு தவித்து நிற்கிறது. இந்நிலையில் கன ரக வாகனம் ஓட்ட உரிமம் வைத்துள்ளவர்கள் அரசுப் பேருந்தை ஓட்டலாம் என்று அன்றாட அடிப்படையில் ஓட்டுனர்களை நியமித்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  உதகையில் இதே போன்று தற்காலிக ஓட்டுனர் ஒருவர் பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். உதகையில் இருந்து கிளன்மார்கன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்துள்ளனர்.

  அரசுப் பேருந்தில் டிரைவிங் பயிற்சி

  அரசுப் பேருந்தில் டிரைவிங் பயிற்சி

  அப்போது பேருந்தில் இருந்த தற்காலிக ஓட்டுனரின் நண்பர் தானும் பேருந்தை ஓட்ட வேண்டும் என்று கேட்க, அதற்கு தற்காலிக ஓட்டுனரும் ஓகே சொல்லி அவரை டிரைவர் சீட்டில் உட்கார வைத்துள்ளார். நண்பருக்கு பேருந்தை சரியாக ஓட்டத் தெரியாததால் அவர் அருகில் நின்று கொண்டு பேருந்தை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்ற சொல்லிக் கொண்டே வந்துள்ளார்.

  ஓட்டம் பிடித்த மக்கள்

  ஓட்டம் பிடித்த மக்கள்

  அரசுப் பேருந்தை தற்காலிக ஓட்டுனர் ஓட்டுகிறாரா என்ற அச்சத்தில் மக்கள் ஏற்கனவே பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக ஓட்டுனர் அவருடைய நண்பருக்கு பேருந்து ஓட்ட கற்றுக் கொடுக்கும் காட்சியை பார்த்து ஆளை விட்டால் போதும் என்று அலறியடித்து ஓடியுள்ளனர்.

  செல்போனில் வீடியோ பதிவு

  செல்போனில் வீடியோ பதிவு

  அரசுப் பேருந்தில் நடந்த இந்த கூத்தை பேருந்தில் பயணித்த ஒருவர் தன்னுடைய செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

  லைசென்ஸை ரத்து செய்க

  லைசென்ஸை ரத்து செய்க

  இந்த வீடியோ இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது, ஒன்று தற்காலிக ஓட்டுனர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்பதையும், அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் எவ்வளவு அக்கறையுடன் மக்களுக்காக தங்கள் சேவையை செய்து வருகின்றனர் என்பதும் தெரிகிறது. மற்றொருபுறம் உதகை மலைப்பாதையில் இப்படி அக்கறையில்லாமல் அரசுப் பேருந்து ஓட்ட நண்பருக்கு கற்றுக்கொடுத்தவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொந்தளிக்கன்றனர் மக்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Temporary driver who drives the government bus at Ooty teaches driving to his friend video is going viral in socail media, what was the action against him is the question now?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற