அதிமுகவில் தலைவர்களே இருக்கக் கூடாது என்பதற்காக ஐடி ரெய்டு... தமிமுன் அன்சாரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிமுகவில் தலைவர்களே இருக்கக் கூடாது என்பதற்காக வருமான வரி சோதனை நடக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டி இருக்கிறார். இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிமுன் அன்சாரி இன்று தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மனித நேய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான கட்சியாக திகழ்கிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் மனித நேய ஜனநாயக கட்சி எப்போதும் குரல் கொடுத்து வருகிறது.

Thamimun Ansari talks about income tax raid in Tamilnadu

அதிமுக கட்சியில் நிரந்தர தலைவரே உருவாக கூடாது என்பதற்காக வருமான வரி சோதனையை நடத்துகின்றனர். யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம்.

சசிகலா உறவினர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருவது அரசியல் உள்நோக்கமாகும். சசிகலா உறவினர்களுக்கு அரசியல் ரீதியான பயத்தை ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thamimun Ansari talks about income tax raid in Tamilnadu. He says that BJP doesn't allow anyone to become the leader of ADMK party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற