Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்று கேட்டு தந்தி டிவி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தின் அடுத்த முதல்வராக மக்கள் யாரை ஆதரிக்கின்றனர்?- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று கேட்டு தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கருணாநிதியின் வயது மூப்பு காரணத்தினாலும் ஜெயலலிதா இல்லாததாலும் இன்றைய தினம் தடுக்கி விழுந்தால் ஒரு அரசியல் கட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அதன்படி சினிமா நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சியும் தொடங்கிவிட்டனர். இன்னும் சில நடு வயது ஹீரோக்கள் கட்சியை ஆரம்பிக்க ஆழம் பார்த்து வருகின்றனர்.

    மக்கள் அதிருப்தி

    மக்கள் அதிருப்தி

    தமிழகத்தில் கடந்த இரு சட்டசபை தேர்தல்களிலும் ஜெயலலிதாவுக்காக அவர்
    ஆதரிக்கும் வேட்பாளருக்கு மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தனர். ஆனால் அவருக்கு பிறகு தற்போது நடக்கும் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    பதவியை காப்பாற்றிக் கொள்ள

    பதவியை காப்பாற்றிக் கொள்ள

    தற்போது தங்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றி கொள்ள மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்க்கும் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போதைய ஆளும் கட்சியிடம் இல்லை. இதனால் தமிழகத்துக்கு பாதகமாக இருந்தாலும் சரி அதை ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாளர்களை பார்த்து மக்கள் அலுத்துவிட்டனர்.

    நான்தான் முதல்வர்

    நான்தான் முதல்வர்

    இந்த நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரும் ஆழம்பார்க்க உள்ளனர். மக்கள் மாற்றத்தை தேடி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் யார் உள்ளனர் என்பது குறித்து ஒரு கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகிறது.

    யார் முதல்வர்

    யார் முதல்வர்

    அதன்படி தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் 51 சதவீதத்துடன் ஸ்டாலினை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 25 சதவீதத்துடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ், தினகரனுக்கும் ரஜினிக்கும் 6 சதவீதம் ஆதரவு உள்ளது. கமலுக்கு 5 சதவீதமும் அன்புமணிக்கு 4 சதவீதமும் ஆதரவு உள்ளது. இதில் பாஜகவும் தேமுதிகவும் சீனிலேயே வரவில்லை. ஒரு குறிப்பிட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட கணிப்புகள் உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+