தமிழக கடல்பகுதியில் இன்று நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்! மீன்கள் விலை உயரும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கடல்பகுதியில் இன்று நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.

The 61 days to midnight, the fishing barrier comes into effect in Tamil Nadu

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 13ம் தேதி முடிவடைகிறது. தடைக்காலம் 45 நாட்கள் இருந்த நிலையில் 61 நாட்களாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக கடல்பகுதியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடலில், மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 முடிய 61 நாட்கள் தடைக்காலம் என ஆய்வு பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளை பராமரிக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

எனவே விசைப்படகு பராமரிப்பு பணிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுப்படகு, சைபர்படகுகளுக்கு இந்த தடைக்கலாம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the Tamil Nadu seaside today, the 61 days to midnight, the fishing barrier comes into effect. The ban is for fishes reproduction.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற