அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.. பீதியை கிளப்பும் பொன் ராதாகிருஷ்ணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றார்.

The final chapter of AIADMK is being written: Minister of state Ponradha Krishnan

முத்தலாக் தடைச்சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் மகிழ்ச்சியடைந்திரப்பதாக அவர் கூறினார். மேலும் தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள் தங்களின் நிலைகளை இழந்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாகவும் திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை புதிய மாற்றமாக இருக்கம் என மக்கள் நினைக்கலாம் என்ற அவர் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி மாபெரும் சக்தியாக கொண்டுவர முயற்சி செய்கிறோம் என்றும் கூறினார்.

அதிமுகவை பாஜகதான் இயக்கி வருகிறது என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister of state Ponradha Krishnan said that the final chapter of AIADMK is being written. The DMK is heading towards the last chapter, he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற