எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் சுகாதார துறை செயலர் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறிது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

The High Court bench madurai ordered Tamilnadu govt to file documents in the AIIMS hospital case

அப்போது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சுகாதாரத்துறை தலைமை செயலர் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராக நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The High Court has ordered the Madurai bench to file documents in the AIIMS hospital case. The Madurai bench of the High Court has warned that the health department will appear if they not file the documents.
Please Wait while comments are loading...