டெங்கு பலிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு... மத்திய மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: டெங்கு இழப்பீடு குறித்து பதில் அளிக்க மத்திய மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால், மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

The High court Madurai bench has been ordered to the Central and State Government to respond the dengue compensation

அதில் தமிழகத்தில், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுக்கள், சுகாதார சீர்கேட்டால், இந்நோய்கள் ஏற்படுகின்றன.

குப்பை, கழிவுநீரை தேங்கவிடாமல் அகற்றி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மர்மக் காய்ச்சலால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் இறந்துள்ளனர். முறையான மருத்துவ உதவி கிடைக்காததால், இக்காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது.

டெங்கு, மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு எவ்வித உதவியும் அளிக்கவில்லை. டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் அக்டோபர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The High court Madurai bench has been directed to the Central and State Government to respond the dengue compensation. A person Ramesh has filed a petition to give 5 lack Rupees for dengue dead family.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற