வெப்பச்சலனத்தால் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனத்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கடுமையான வெயில் சுட்டெரித்தாலும் திடீர் என பெய்யும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சில்லென காற்று வீசி வருகிறது.

The Meteorological Center has said that its likely to rain in the evening or at night in chennai

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The Meteorological Center has said that its likely to rain in the evening or at night in chennai

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 8 சென்டி மீட்டர் மழையும் திருபுவனம், ஆலங்குடியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Meteorological Center has said that is likely to rain in the evening or at night in chennai.The Meteorological Center has said that it is likely to rain with some thunderstorm today in Tamil Nadu and Puducherry.
Please Wait while comments are loading...