எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்லத்தான் செய்வார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted By: T Nandhakumar
Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக அழுத்தத்தினால்தான் காவிரி விவகாரத்தில் தற்போது இந்தளவுக்கு நடந்துள்ளதாகவும், எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்லத்தான் செய்வார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

The Opposition Always Criticizes The Governance Minister Sellur Raju

காவிரி விவகாரத்தில் அனைத்து பணியும் நடந்துள்ளன. அதிமுக அழுத்தத்தினால்தான் காவிரி விவகாரத்தில் தற்போது இந்தளவு நடந்துள்ளது. மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருந்தால் என்ன செய்வாரோ, அதையேதான் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் செய்து வருகிறது.

மக்கள் எளிதாக சந்திக்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்லத்தான் செய்வார்கள்.

தற்போது மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து உரிய நேரத்தில் முதலமைச்சர் விளக்கம் கொடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellur Raju has said that if the Opposition is to blame always the ruling party. The Minister said that the Government of Tamil Nadu is taking a lot of effort in the Cauvery case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற