தொடரும் கனமழை.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீட்மட்டம் கிடுகிடு உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

  சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

  வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் அடித்து ஆடி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

  The water level of lakes offering drinking water to Chennai has increased

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

  செம்பாரக்கதத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16.6 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்இருப்பு ஒரே நாளில் 150 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது. நேற்று 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு இன்று 452 மி.கனஅடியானது.

  இதேபோல் புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 150 மில்லியன் கனஅடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 487 மில்லியன் கனஅடியாக அதிகரித்தள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The water level of lakes offering drinking water to Chennai has increased by the heavy rains in Chennai and suburbs.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற