For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை இலை.. கொண்டாட்டங்களை காட்ட அதிமுகவுக்கு டிவி இல்லாமப் போச்சே பாவம்!

இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில் அதிமுகவினரின் கொண்டாட்டங்களை காட்ட டிவி இல்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: இரட்டை இலை சின்னம் பெற்றதால் அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி- ஓபிஎஸ் அணியினர் ஈடுபடும் மகிழ்ச்சி கொண்டாட்டங்களை மக்களுக்கு ஒளிபரப்ப அதிமுகவுக்கு தற்போது டிவி சேனல் இல்லாமல் போயிற்றே.

    இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினரும், தினகரன் அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய
    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கு கிடைத்துவிட்டது. நியாயம் எங்கள் பக்கம் இருந்ததால் எங்கள் அணிக்கு கிடைத்துவிட்டது.

     கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கூடி அங்கு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதை ஒளிபரப்பு செய்ய அவர்களுக்கு டிவி சேனல் இல்லை. வழக்கமாக ஜெயலலிதா இருந்தபோதும் சரி, மரணமடைந்த போதும் சரி அரசு தொடர்பான கொண்டாட்டங்கள், நலத்திட்ட விழாக்கள் என அனைத்தும் ஜெயா டிவியில் ஒளிபரப்பப்படும். பெண் தொண்டர்கள் போடும் குத்தாட்டங்களும் டிவியில் ஒளிபரப்பப்படும்.

     தினகரன் அணி

    தினகரன் அணி

    ஜெயலலிதா கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கினார். இதில் சசிகலா, விவேக், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். அதேபோல் நமது எம்ஜிஆர் பத்திரிகையும் அதிமுகவினருடையதுதான். ஆனால் இவை இரண்டையும் விவேக் ஜெயராமன் நிர்வகித்து வருகிறார். தற்போது தினகரன் அணி தனித்து செயல்படுகிறது.

     பொதுக் குழுவில் தீர்மானம்

    பொதுக் குழுவில் தீர்மானம்

    எனவே அதிமுக அரசுக்கு எதிரான செய்திகளை மட்டுமே ஜெயா டிவி ஒளிபரப்பி வருகிறது. ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆரையும் கைப்பற்ற வேண்டும் என்று
    எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வேதனை

    வேதனை

    ஆனால் இவை இரண்டும் ஒரு நிறுவனங்கள். இவற்றை நாங்கள் அளிக்க மாட்டோம் என்று தினகரன் தரப்பினர் கூறிவருகின்றனர். இரட்டை இலை கிடைத்துவிட்டாலும் டிவியும், பத்திரிகையும் இன்னமும் கிடைக்கவில்லையே என்று தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    English summary
    Edappadi says that out team has got twin leaves. So ADMK cadres are gathered in party office and they did celebrations. But for telecasting their happiness and celebrations, there is no TV for Edappadi team, because Jaya TV and Namadhu MGR are in the control of TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X