விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பாமக நிர்வாகி, மனைவியை மருத்துவமனையில் சேர்த்த திருமா
புதுச்சேரி: பிரச்சாரத்திற்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பாமக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திங்கட்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பினார். சென்னையில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் கிளம்பினார்.

அவரது கார் திருநாரையூரை அடைந்தபோது சாலையோரம் ஒரு ஆணும், பெண்ணும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தார் திருமா. உடனே காரை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி ஓடி வந்தவரிடம் அங்கிருந்தவர்கள், ஏதோ ஒரு வாகனம் இவர்களை அடித்துச் சென்றுவிட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒரு மணிநேரமாகியும் வரவலில்லை என்றனர்.
பாமக கரை வேட்டி அணிந்திருந்த அந்த ஆணின் காலில் சதை பிய்ந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அவரின் மனைவியும் படுகாயம் அடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த திருமாவளவன் அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணே, அவர் பாமக கரை வேட்டி கட்டியுள்ளார் என ஒரு தொண்டர் கூற அதற்கு திருமாவோ, உயிர் தான் முக்கியம் கட்சி அல்ல என்று கூறி மக்களின் மனதை தொட்டுவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications