For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்றே எச்சரித்தோம்... இன்று அதலபாதாளத்தில் பொருளாதாரம்! - திருமாவளவன்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியப் பொருளாதாரத்தின் இப்போதைய உண்மை நிலையை பிரதமர் விளக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Thirumavalavan urges Modi to explain present economic condition

இந்திய பொருளாதார நிலை குறித்து பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க முடியுமா? என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

அவர்களது விமர்சனங்களுக்கு நிதி மந்திரியோ, பிரதமர் மோடியோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதார உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி பிரதமர், நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 'பண மதிப்பு அழிப்பு' நடவடிக்கை ஒரு பொருளாதார அவசர நிலை என்று முதலில் சுட்டிக்காட்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

அந்த நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாட்டுத் தீர்மானத்தில் எச்சரித்தது போலவே இந்திய பொருளாதாரம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும். தான் எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

நாடு பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது என்பதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவசரமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, இன்றைய பொருளாதார நிலை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
VCK chief Thol Thirumavalavan has urged Prime Minister Modi to explain the present position of Indian Econonomy to the Nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X