திருநாவுக்கரசர் திடீர் டெல்லி பயணம்! ஓபிஎஸ்-க்கான காங். ஆதரவை தடுக்க வியூகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று இரவு டெல்லி செல்கிறார். சசிகலா அணிக்கு ஆதரவு தர ராகுலை வலியுறுத்த அவர் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்காக முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலால் தமிழக அரசியல் களத்தில் கடந்த 3 நாட்களாக அனல் பறந்து வருகிறது. ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் நேற்றிரவு முதல் சிறை வைத்துள்ளார்.

Thirunavukarasar going to delhi to support Sasikala

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருக்கிக்கொண்டே வருகிறது. பொதுமக்களும் ஓபிஎஸ் தான் முதல்வராக வரவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் பீதியில் உறைந்துள்ள மன்னார்குடி கும்பல் காங்கிரஸின் உதவியை நாடியுள்ளது. இதற்காக திருநாவுக்கரசர் மூலம் மன்னார்குடி கும்பல் தூது அனுப்பியுள்ளது.

இன்று இரவு டெல்லி செல்லும் திருநாவுக்கரசர் ராகுலை சந்திக்க உள்ளார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணிக்கு காங். ஆதரவு தர ராகுலிடம் அவர் வலியுறுத்த உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu congress leader Thirunavukarasar going to delhi tonight. He would be urging Rahul to support Sasikala team.
Please Wait while comments are loading...