பேராசியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ்!
பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

திருவண்ணாமலை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார்.
உதவி பேராசிரியர் தங்க பாண்டியனுக்கு இரண்டு பேராசிரியைகள் உதவியதாகவும் மாணவி புகார் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மாவட்ட நீதிமன்றம் வரை சென்றது.

வேறு கல்லூரிக்கு மாற்றம்
நீதிபதி விசாரணைக்கு பிறகு பாலியல் புகார் கூறிய மாணவி திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

மாணவி திட்டவட்டம்
திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

கெடு நிறைவு
இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவியை ‘டிஸ்மிஸ்' செய்ய கோவை வேளாண் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அக்டோபர் 1-ந் தேதி வரை பல்கலைக்கழகம் கெடு விதித்திருந்தது.

எச்சரிக்கை கடிதம்
அதற்குள் திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி கல்லூரியில் சேர்ந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த 26-ந் தேதி மாணவிக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

மாணவி டிஸ்மிஸ்
ஆனால் வேறு கல்லூரிக்கு சென்றால் தனக்கு பாதுகாப்பில்லை என்று கூறிய மாணவி உத்தரவுகளை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து காலக்கெடு முடிந்ததையடுத்து மாணவி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சகமாணவிகள் புகார்
இதனால் மாணவி இனி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி மீது சக மாணவ, மாணவிகளும் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications