For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவதூறாக வீடியோ.. ‘டிக்–டாக்’ திவ்யாவுக்கு தர்ம அடி.. மன்னிப்பு கேட்க வைத்து திருநங்கைகள் ஆவேசம்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த மருங்குளத்தை சேர்ந்த டிக் டாக் திவ்யா என்பவர் கார்த்தி என்பவரை தேடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெகுபிரபலம். இவர் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் அவதூறாக வீடியோ வெளியிட்டார்.

இதனால் கொதித்துப்போன திருநங்கைகள் அவரது வீட்டிற்கே சென்று ஏன் அப்படி செய்தாய் என்று கேள்வி கேட்டனர். அத்துடன் திவ்யாவிற்கு தர்ம அடி கொடுத்தனர்.

அத்துடன் தான் பேசியது தவறுதான் என்று கூறி திவ்யாவை அவர்கள் மன்னிப்பும் கேட்க வைத்தனர். இது தொடர்பாக திவ்யா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து: சோகத்தோடு கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து: சோகத்தோடு கும்மியடித்து வழிபட்ட திருநங்கைகள்

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

தஞ்சாவூர் அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் திவ்யா. எம்.எஸ்.சி., பயோ-டெக்னாலஜி படித்துள்ளார். திவ்யா கள்ளச்சி என்ற பெயரைக் கொண்ட இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலம். கடந்த சில நாட்களுக்கு முன், திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேவலமான ஊர்

கேவலமான ஊர்

அதில், கொரோனா காலத்தில் கைதட்டி, மிரட்டி காசு பறிக்கும் திருநங்கைகள் என்றும், ஊரில் உள்ளவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை, ஆண்கள் எல்லாம் பெண்கள், கேவலமான ஊர் என்று பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

திவ்யாவுக்கு தர்ம அடி

திவ்யாவுக்கு தர்ம அடி

இதனால் ஆத்திரமடைந்த திருங்கைகள், திவ்யாவை தேடி வந்தனர். இதையறிந்த திவ்யா தலைமறைவானர். நேற்று முன்தினம் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இவரது வீட்டிற்கே சென்றுவிட்டனர். அங்கு இருந்த திவ்யாவை, திருநங்கை அடித்து உதைத்து, காலில் விழ வைத்தனர்.

மன்னிப்பு கேட்க வைத்தனர்

மன்னிப்பு கேட்க வைத்தனர்

இனி யாரை பற்றியும் தவறாக பேசக் கூடாது என மன்னிப்பு கேட்க வைத்தனர். அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், இது சம்பவம் தொடர்பாக திவ்யாவும், திருங்கைகளும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

English summary
The videos posted by 'tik tok Divya' from Marungulam next to Thanjavur in 'search of Karthi' are very popular on social media. she recently released a defamatory video of transgender people extorting money. The angry transgender people went to her house and asked her why she did that. As well as they beated Divya. .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X