கணவரை பிரிந்து காதலனோடு சேர்ந்த இளம்பெண்! கைக்கொடுக்காத காதல் வாழ்க்கை.. இருவரும் பலி! என்னாச்சு?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவரை பிரிந்து காதலனை கரம்பிடித்த இளம்பெண், வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது காதல் கணவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பெரியகரம் அடுத்த சுண்ணாம்பு கல்லை பகுதியில் வசித்தவர் சங்கீதா (18). குனிச்சி அடுத்த பெரியார் வட்டம் பகுதியில் வசித்தவர் சித்தன் விஜயா மகன் மேகநாதன் (24).
இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சங்கீதாவுக்கு வேறுதிருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

திருமணம்
மாங்குப்பம் அடுத்த நரியநேரி கிராமத்தில் வசிக்கும் 24 வயது வாலிபருடன், சங்கீதாவுக்கு திருமணம் நடந்தது. 4 மாதங்கள் அவருடன் சங்கீதா வாழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் சங்கீதாவால், காதலன் மேகநாதனை மறக்க முடியவில்லை. இதையடுது்து அவர் வீட்டை விட்டு வெளியேறி மேகநாதனுடன் பெங்களூர் சென்று வசித்து வந்தார்.

காதலனுடன் ஓட்டம்
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து சங்கீதாவை அவரது கணவரின் குடும்பத்தினர் தேடிவந்தனர். அப்போது பெங்களூரில் காதலனுடன் அவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருகுடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் சங்கீதாவை, காதலன் மேகநாதனுடன் அனுப்பினர்.

சங்கீதா இறப்பு
இதையடுத்து இருவரும் 6 மாதமாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். சங்கீதா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை திடீரென சங்கீதாவிற்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக சங்கீதாவை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்தார்.

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் பெங்களூரில் கொத்தனார் வேலை செய்த கணவர் மேகநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சொந்தஊர் கிளம்பி வந்தார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லாத அவர் மனைவி இறந்த சோகத்தில் மனம் உடைந்து திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications