For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுப்பூசி போட தயங்கிய விவசாயி..ஆடு, மாடுகளை மேய்க்க தயாரான மருத்துவர்..அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கிய விவசாயியிடம் கை, கால் வலி ஏற்பட்டால் தான் ஆடு மாடுகளை மேய்ப்பதாக மருத்துவர் உறுதி அளிக்கும் வீடியோ வைரலாகியிருந்தது. அந்த விவசாயி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், அதற்கு அந்த மருத்துவரே பதில் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    வென்றது மருத்துவம்... என் மாட்டை மேய்க்கிறீங்களா என கேட்ட மருத்துவரிடமே தடுப்பூசி போட்டுக்கொண்ட விவசாயி!

    கொரோனா பாதிப்பு 2ஆம் அலைக்கு பிறகு தற்போது தான் மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், 3ஆம் அலை குறித்து வெளிவரும் தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.

    தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே தடுப்பூசிக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால் வேக்சின் பணிகளை அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    கல்புர்கி தூர்தர்ஷன் அலுவலகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தொடரும்- பிரசார் பாரதி சிஇஓ சசி விளக்கம் கல்புர்கி தூர்தர்ஷன் அலுவலகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தொடரும்- பிரசார் பாரதி சிஇஓ சசி விளக்கம்

    கொரோனா வேக்சின்

    கொரோனா வேக்சின்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடம் கொரோனா வேக்சின் குறித்து முறையான விழிப்புணர்வு இருக்கிறது. அதனால் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வேக்சின் போட்டுக்கொள்கிறார்கள். அதேநேரம் வேக்சின் போட்டால் காய்ச்சல், உடல் வலி போல சில நாட்கள் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக வெகு சிலர் மட்டும் தடுப்பூசி போடத் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களிடமும் கூட தடுப்பூசியின் நன்மைகள் குறித்து நமது சுகாதார ஊழியர்கள் எடுத்துக் கூறி வேக்சின் போடச் சம்மதம் வாங்கி விடுகின்றனர்.

    ஆடு மாடு

    ஆடு மாடு

    அதுபோன்ற ஒரு சம்பவம் தான் திருப்பத்தூரில் நடந்துள்ளது. ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்காகச் செல்லும் விவசாயியிடம் கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். தடுப்பூசி போட்டால்தான் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் அப்போது தான் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரி தெரிவிக்கிறார்கள். அதற்கு அந்த விவசாயி, "தடுப்பூசி போட்டால் கை, கால் வலிக்கும் காய்ச்சல் வருமென்று சொல்கிறார்கள், அப்படி வந்தால் என் ஆடு, மாடுகளை நீங்கள் மேய்க்கிறீர்களா?" எனக் கேட்கிறார்.

    வைரலான வீடியோ

    அதற்குத் துளியும் யோசிக்காமல் சட்டென அங்கிருந்த மருத்துவர் கவுசிக், "அதெல்லாம் ஒன்றும் வராது. சரி, ஒரு நாள் நான் ஆடு, மாடுகளை உங்களுக்குப் பதிலாக மேய்கிறேன். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்?" என கூறுகிறார். இந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலானது. இருப்பினும், அந்த விவசாயி வேக்சின் போட்டுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது.

    மருத்துவர் புதிய வீடியோ

    இந்நிலையில் மருத்துவர் கவுசிக் நேற்று அந்த விவசாயி உடன் புதிதாக செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆடு, மாடுகளை மேய்ப்பதாக உறுதியளித்த பிறகும் கூட அதைக் கேட்காமல் விவசாயி அங்கிருந்து நகர்ந்துவிட்டதாகவும் இருப்பினும் சற்று நேரம் கழித்து மனம் மாறிய விவசாயி மீண்டும் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    தடுப்பூசி போட்டுக் கொண்டார்

    தடுப்பூசி போட்டுக் கொண்டார்

    மேலும் அந்த செல்ஃபி வீடியோவில் அந்த விவசாயி, "என்னிடம் நிறையப் பேர் கேட்டிருந்தீர்கள்... கடைசியில் அந்த விவசாயி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்று. அன்றைய தினமே அவருக்குத் தடுப்பூசி போட்டுவிட்டேன். தடுப்பூசி போட்ட பிறகு உங்களுக்கு எதாவது தொந்தரவு இருக்கா? இப்போதும் உங்களுக்குத் தடுப்பூசி குறித்த பயம் இருக்கிறதா" என்று அந்த விவசாயியை பார்த்துக் கேட்கிறார்.

    அனைவரும் வேக்சின் போடுங்க

    அனைவரும் வேக்சின் போடுங்க

    அதற்கு அந்த விவசாயி, "இல்லை சார், நான் நன்றாக இருக்கிறேன். இப்போது தடுப்பூசி குறித்த அச்சம் எதுவும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கணும். அப்போது தான் இனி கொரோனா வந்தால் கூட ஒதுங்கிப் போய்விடும். பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்றும் அட்வைரஸ் செய்கிறார். அந்த விவசாயி தைரியமாக கொரோனா தடுப்பூசி போட்டதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இது தான் தன்னுடைய வெற்றி என்று கருதுவதாகவும் மருத்துவர் கவுசிக் குறிப்பிட்டுள்ளார்.

    தடுப்பூசியே ஒரே ஆயுதம்

    தடுப்பூசியே ஒரே ஆயுதம்

    தற்போது இருக்கும் சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே தடுப்பூசிக்கு எதிரான ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் மூலம் கொரோனா உயிரிழப்புகளும் தீவிர கொரோனா பாதிப்பும் 95% மேல் குறைகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tirupattur doctor's viral video on Corona vaccination. Tamilnadu Corona vaccination latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X