திருப்பத்தூரில் மாறும் அரசியல் கணக்கு: திமுகவில் இணைகிறார் நிலோபர் கபில்.. எடப்பாடிக்கு பேரிடி!
திருப்பத்தூர்: தமிழக அரசியலில் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் கட்சித் தாவல்களும், அரசியல் மாற்றங்களும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், இன்று பிப்ரவரி 14, 2026 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் நிலோபர் கபில். அந்த காலகட்டத்தில் அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் இவருக்கும் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி, மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் நிலோபர் கபில்
இவர்களுக்கிடையிலான மோதல் போக்கு பகிரங்கமாகவே வெடித்தது. இதன் விளைவாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் அவர் மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி புகார்கள் எழுந்தபோதும், அவர் அவற்றை சட்டரீதியாக சந்திப்பதாக கூறி பொதுவாழ்விலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்
பிறகு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்த பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்த போதிலும், கட்சித் தலைமை தொடர்ந்து கே.சி. வீரமணிக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், தன்னை திட்டமிட்டு ஓரங்கட்டுவதாகவும் நிலோபர் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்து வந்தது. அதிமுகவின் உட்கட்சிப் பூசலும், தகுந்த அங்கீகாரம் கிடைக்காத சூழலுமே அவரைத் திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
நிலோபர் திமுகவில் இணைகிறார்
வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலோபர் கபிலுக்கு எனத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியில் அவர் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறார்.
இந்நிலையில்தான், ஜோலார்பேட்டை பொன்னேரியில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெறுகிறது.. இந்தே நிகழ்வில், நிலோபர் கபில் இணைப்பு நிகழ்வு மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இது திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் மாநாட்டில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைய விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிகிறது.. நிலோபர் கபில், அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
ஜோலார்பேட்டையில் இன்று நடைபெறும் திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டிற்கு நிலோபர் கபில் சென்றுள்ளார். இதன்மூலம், அவர் திமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது. அவரது வருகை திமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் தாக்கம் மற்றும் நன்மைகள்
நிலோபர் கபிலின் இந்த வருகை திமுகவிற்கு திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சில நகர்ப்புறப் பகுதிகளில் சிறுபான்மையின வாக்குகளைத் திமுக பக்கம் முழுமையாகத் திருப்புவதற்கு இவரது நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் மக்கள் தொடர்பு பெரிதும் உதவும்.
முன்னாள் அமைச்சர் ஒருவர், அதுவும் செல்வாக்குள்ள ஒரு பெண் தலைவி ஆளுங்கட்சியில் இணைவது, எதிர்க்கட்சியினரிடையே ஒருவிதமான மனச்சோர்வை உண்டாக்கும். அதே வேளையில், திமுகவின் தேர்தல் களப்பணிகளுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தையும், தேர்தல் வியூகங்களில் கூடுதல் சாதகத்தையும் தரும். மேலும், மாவட்ட ரீதியாக கே.சி. வீரமணியின் தனிப்பட்ட செல்வாக்கைச் சிதைக்க நிலோபரின் அரசியல் நகர்வுகள் திமுகவிற்கு ஒரு வலுவான ஆயுதமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்... பொறுத்திருந்து பார்ப்போம்..
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications