For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று சென்னையில் அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 9 அரசியல் கட்சி நிர்வாகிகளை தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்களான ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் துணை ஆணையர்கள், நேற்று மாலை, விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், அவர்கள் காரில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். இன்று காலை, புதுச்சேரி மாநில உயர் அதிகாரிகளுடன், அம்மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

TN assembly election: CEO holds political parties meet

மாலை சென்னை திரும்பிய தேர்தல் ஆணையர்கள் சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள, லீலா பேலஸ் ஓட்டலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளுடன் 10 நிமிடம் தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.

வாக்குக்கு பணம் கொடுத்தால் அரசியல் கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன் வைத்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூட்டத்திற்கு பின்னர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

இன்றைய ஆலோசனை கூட்டம் முடிவடைந்த உடன் வியாழக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்துப்பேசும் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

English summary
Chief Election Commissioner of India Nazim Zaidi to meet all party leaders in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X