For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் ஓட்ட கட்டாயப்படுத்திய மேலாளர்.. விழுப்புரம் பணிமனையில் டிரைவர் தற்கொலை முயற்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

விழுப்புரம்: 13வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத் து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டிரைக் நடுவே, பஸ்சை இயக்க விழுப்புரம் கிளை மேளாளர் வற்புறுத்தியதாகவும், இதனால், விழுப்புரம் மூன்றாவது பணிமனையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஹென்றி பால்ராஜ், பணிமனையின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN bus driver Henry tried to commit suicide by jumping from the roof at Villupuram

ஹென்றி பால்ராஜ் 2 நாட்களாக தொடர்ந்து பஸ் ஓட்டியுள்ளார். எனவே பணிமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அவரை பஸ்சை இயக்க சொல்லி கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். பஸ்சை இயக்கினால் விபத்தில்தான் சிக்க வேண்டியிருக்கும் எ அவர் கூறியதை ஏற்காமல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளை மேலாளர் எச்சரித்ததால், பதற்றறமடைந்த ஹென்றி பால்ராஜ், பணிமனையின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவடைந்த நிலையில் அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
The government bus driver Henry tried to commit suicide by jumping from the roof at Villupuram as manager of the depot forcing him to drive the bus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X