தில்லு காட்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.... முதல்வர் அவசர ஆலோசனை - வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விதித்த கெடு இன்றுடன் முடியும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் அக்கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

TN CM having meeting with ministers

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவர்கள் ஆளுநரை சென்று சந்தித்தது குறித்து செப்-14ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அனைவருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து செயல்படும் தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ, சபாநாயகரைச் சென்று சந்திக்க மாட்டோம். அதேவேளையில் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம் என கூறினார்.

இந்த குழப்பமான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Chief minister Edappadi Palanisamy haiving meeting with ministers regarding non cooperation of Dinakaran support MLAs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற