For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.28 கோடி செலவில் பள்ளிகள், சேமிப்பு கிடங்குகள்... எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய மாதிரி பள்ளிக் கட்டடங்கள், உணவு சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: ரூ.20 கோடி செலவில் 4 மாதிரி பள்ளிகள், ரூ.8 கோடி செலவில் 6 உணவு பொருள் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரம் வட்டம், கல்வராயன் மலையில் உள்ள மூலக்காடு என்னும் இடத்தில் 32,179 சதுர அடி பரப்பளவில், 14 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், பணியாளர் அறை, நூலகம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 5 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

TN CM opens model schools and Food storage warehouses

மேலும், விழுப்புரம் மாவட்டம்-திருநாவலூரில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், உளுந்தூர்பேட்டையில் 4 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தர்மபுரி மாவட்டம் - காரிமங்கலத்தில் 4 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிகள்; எனமொத்தம் 20 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்கட்டப்பட்டுள்ள 4 மாதிரிபள்ளிகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் - பாபநாசம் வட்டம், இரும்புத்தலையில் 929.25 சதுர மீட்டர் பரப்பளவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், 619.50 சதுர மீட்டர் பரப்பளவில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், என மொத்தம் 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 உணவு பொருள் கிடங்குகளையும், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரையில் 929.25 சதுர மீட்டர் பரப்பளவில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்; என மொத்தம் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 உணவு பொருள் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் திறந்து வைத்தார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy opens model schools and Food storage warehouses in various districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X