வண்ண மீன்கள் பூங்கா... கொளத்தூருக்கு கேட்ட ஸ்டாலின்.. மாதவரத்துக்கு மாற்றிய அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் பூங்கா அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய மீன்வளத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வண்ண மீன்கள் பூங்கா கொளத்தூரில் அமைக்க அரசிடம் திட்டம் இல்லை.

TN Govt decided to form an Aquarium at Madhavaram ,Minister Jayakumar announced

அதே நேரத்தில் மாதவரத்தில் வண்ண மீன்கள் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் தொடங்கியது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி மசோதாவும் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Govt decided to form an Aquarium at Madhavaram , Minister Jayakumar announced in TN Assembly.
Please Wait while comments are loading...