போலீசை ஏவி கதிராமங்கலத்தில் போராட்டத்தை நசுக்கும் அரசு.. புரட்சிகர இளைஞர் முன்னணி குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி க்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை போலீசாரை ஏவி ஒடுக்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் இன்று காலை 11 மணி அளவில், தாளமுத்து நடராசன் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 TN govt handling Kathiramangalam peoples with police power, RYF alleges

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், " கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசை ஏவி ரவுடித்தனம் செய்த தமிழக அரசை கண்டிக்கிறோம். கதிராமங்கலத்தில் இருந்து போலீசை உடனே வெளியேற்ற வேண்டும். போராடி கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

காவிரி உரிமையை மறுத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் திணித்து தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அழித்து, விவசாயப் பொருளாதாரத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டை அடிமைப்படுத்தும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டும். தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

போரட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government handling Kathiramangalam peoples with police power, Revolutionary youth front alleges.
Please Wait while comments are loading...