For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மர்ம காய்ச்சல் என சொல்லி மக்களை ஏமாற்றாமல் உரிய சிகிச்சைகளை வேகமாக அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

டெங்கு உள்ளிட்ட விஷயக் காய்ச்சல்களை மர்ம காய்ச்சல் என ஏமாற்றாமல் உரிய சிகிச்சைகளை வேகமாக தமிழக அரசு அளிக்க திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மர்ம காய்ச்சல் என சொல்லி மக்களை ஏமாற்றாமல் உரிய சிகிச்சைகளை தமிழக அரசு வேகமாக அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல்களுக்கு சிறுவர்-சிறுமிகள் பலியாகும் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த பரிதாபத்தின் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் பகுதியைச் சேர்ந்த ஆஃபியா ஜாஸ்மின் என்ற 11 வயது சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பலியாகியிருக்கிறார்.

TN govt should take steps to control Dengue Fever, says MK Stalin

அ.தி.மு.க அரசு இத்தகைய உயிர்ப்பலிகளை மறைப்பதற்கான முயற்சிகளில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையோ, நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையோ செய்வதில்லை என்பதை பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோரும் பொதுமக்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவும் போது அது குறித்த முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறை, என்ன காய்ச்சல் என்பதைச் சொல்லாமல், 'மர்மக் காய்ச்சல்' என்று அறிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. மர்மக் காய்ச்சலுக்கு என்னவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதும் மர்மமான முறையிலேயே இருப்பதால் குழந்தைகள் பலியாவது தொடர்கிறது.

TN govt should take steps to control Dengue Fever, says MK Stalin

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பலியான நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை என்ற இடத்தில் வாந்தி மயக்கத்திற்குள்ளான 5 சிறுவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். தமிழகத்தில் சாதாரண குடிமகன்கள் என்ன வகையான காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே மர்மமாகவே இருப்பது பெரும் வருத்தமளிக்கிறது. தமிழக அரசு நிர்வாகம் நோயாளியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை மோசமான நிலையில் இருக்கிறது. நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான சிறுவர்-சிறுமிகள் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து பலியாவதற்கு ஆளும் அ.தி.மு.க அரசும், சுகாதாரத்துறையும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பம்மல் சிறுமி ஆஃபியா ஜாஸ்மினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அந்த சிறுமியின் மரணமே, டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சலுக்கான கடைசி உயிர்ப்பலியாக இருக்க வேண்டும் என்பதை இந்த அரசிடம் வலியுறுத்துகிறேன்.

இனியும் மர்மக் காய்ச்சல் என்று சொல்லி மக்களை ஏமாற்றாமல் சிறுவர்-சிறுமியரின் உயிர் காக்கும் சிகிச்சைகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் அளித்து, உயிர்ப்பலிகளைத் தடுக்க வேண்டும்.

English summary
DMK Treasurer and Opposition leader MK Stalin has urged the Tamilnadu government to act to prevent dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X