ரேஷன் கடைகளுக்கு மூடு விழா நடத்தப் போகிறது தமிழக அரசு? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகமும் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் உள்ள விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தாலும் விரைவில் ரேஷன் கடைகள் மூடும் அபாயம் உள்ளதாகவே சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள கருத்துகள்:

 திறந்திருக்கும் ஆனா...

திறந்திருக்கும் ஆனா...

Vinoth J:

ரேஷன் கடைகள் திறந்து இருக்கும்
ஆனால் இனி பொருட்கள் கிடையாது .
அரசு புதிதாக கொண்டுவந்த விதிமுறை படி
20% பேருக்கு மட்டுமே இனி பொருட்கள் கிடைக்கும்.
70% மக்கள் க்கு ரேஷன் இல்லை.
2019 குள் இந்த 20% மக்களுக்கும் க்கும் ரேஷன் கிடைக்காது.
சமையல் எரிவாயுவிற்கு மானியம் 2018 முதல் ரத்து மத்திய அரசு . .
இதே தான் ரேஷன் கடை வாடிக்கையாளர்களுக்கும் 2019 க்குள் கடைகளுக்கு மூடு விழா .
- Thirumurugan Gandhi சொன்னது நடக்க ஆரம்பிக்கிறது

 இதுதான் காரணம்

இதுதான் காரணம்

Anantha Prakash

உண்மை என்னனா ரேஷன் கடை மூடுவிழா அப்ப எந்த சிறு சச்சரவும் இருக்கக்கூடாதுனு தான் திருமுருகன் காந்தியை ஒரு வருஷம் உள்ள புடிச்சு போட்டிருக்கானுக

 ரேஷன் கடை இனி இல்லை

ரேஷன் கடை இனி இல்லை

Subha Sharmila

இதெல்லாம் சொல்றதுக்கு ரேஷன் கடை இனிமேல் இல்ல சொல்லிட்டு போகாலாம் 😡😡😡

 காந்தி...காமராஜ்

காந்தி...காமராஜ்

Nelson Xavier
பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகளுக்கு) மொத்தமாக மூடு விழா நடத்தப் போவதை குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தவர் திருமுருகன் காந்தி. இப்போது அதை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அரசாணையை வெளியிட்டுவிட்டு அதை அமல்படுத்தப் போவதில்லை என்று சமாளிக்க ஆரம்பித்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
நமக்கு கிடைத்த காந்தி இப்படி !
நாம் தேர்ந்தெடுத்த காமராஜ் எப்படி !

 உண்மையாகிவிட்டது

உண்மையாகிவிட்டது

ஆர்த்திக் தமிழன்

இந்த ரேஷன் கடை மூடு விழா பற்றி தோழர் திருமுருகன் காந்தி அன்றே தெளிவாக பதிவு செய்தார்

https://www.youtube.com/watch?v=OArkYzu5R6E

ஆனால் தோழர் திருமுருகன் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டது அரசாங்கம்.

http://www.thehindu.com/.../activist-faceb.../article8560775.ece

#இன்று தோழர் திருமுருகன் காந்தி சொன்னது உண்மையாகிவிட்டது...

Netizens posted that TamilNadu Govt will shut the public distribution system very soon.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்தது

தமிழக அரசின் புதிய அரசாணையால் பெரும் சர்ச்சை

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens posted that TamilNadu Govt will shut the public distribution system very soon.
Please Wait while comments are loading...