அரசை தக்க வைக்க எடப்பாடியார் தரப்பு படுமும்முரம்.. டெல்லிக்கு சமாதான தூது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆட்சியை காப்பாற்ற டெல்லியுடம் சமாதானம் செய்யும் எடப்பாடியார் தரப்பு- வீடியோ

  சென்னை: ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள டெல்லியுடன் சமாதானப் பேச்சுகளை எடப்பாடியார் தரப்பு படுமும்முரமாக நடத்தி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் நியமிக்கப்படும் வரை டெல்லியுடன் எடப்பாடியார் தலைமையிலான அரசு இணக்கமாக இருந்து வந்தது. பன்வாரிலால் பதவியேற்ற பின்னர் டெல்லிக்கு சென்று திரும்பினார்.

  இப்பயணத்துக்கு பின்னர் டெல்லிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தமிழக அரசை டெல்லி கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது. நிதி ஒதுக்கீட்டிலும் டெல்லி கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

  தமிழக அரசுக்கு நெருக்கடி

  தமிழக அரசுக்கு நெருக்கடி

  இதையடுத்து தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு எதிராக கருத்துகளை முன்வைக்கவும் தொடங்கினர். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படத் தொடங்கியது.

  அமித்ஷாவுடன் பேச்சு

  அமித்ஷாவுடன் பேச்சு

  இதை விரும்பாத முதல்வர் எடப்பாடி தரப்பு தற்போது டெல்லியுடன் சமாதான பேச்சுகளை தொடங்கியுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மறுவாழ்வு கொடுத்த முக்கிய பிரமுகர் மூலமாக இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

  டெல்லியில் ஊழல் பட்டியல்

  டெல்லியில் ஊழல் பட்டியல்

  இப்பேச்சுவார்த்தைகளில்தான் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை பன்வாரிலால் டெல்லியில் கொடுத்திருக்கிறாராம்; அதன்பின்னர்தான் தமிழக அரசை டெல்லி கண்டுகொள்ளவில்லையாம் என்கிற விவரம் தெரியவந்துள்ளது.

  கோபத்தை தணிக்க ஆலோசனைகள்

  கோபத்தை தணிக்க ஆலோசனைகள்

  பன்வாரிலாலிடம் அமைச்சர்களின் ஊழல் விவரங்களை கொடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி என்றும் தெரியவந்துள்ளது. இப்போது டெல்லியின் கோபத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளை எடப்பாடியார் தரப்பு மேற்கொண்டு வருகிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sources said that Team EPS is trying to wave white flag to Delhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற