மக்கள் மனதில் என்றென்றும் ராஜா.. எங்கள் காமராஜர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "கா"மாட்சியாய் வளர்ந்து
"ம"க்கள் மனந்தனில்
"ரா"ஜனாக (முதல்வராக) அமர்ந்து
"ஜ"ன்மத்துக்கும் இதுபோல உண்டோ
என்று எண்ண வைத்து விட்டவ"ர்"

நிழலின் அருமை வெயிலில் தெரியும்!
ஆம்
இன்றைய தகிக்கும் அரசியல் சூழலில் மக்கள் மனத்தில் தோன்றும் எண்ணம் திரும்பவும் ஒரு காமராஜர் கிடைத்திடுவாரா என்பதுதான்.
நிழல்கள் என்று நம்பி இளைப்பாறிய பின், இவ்வளவு காலமாக "டைனோசரின்" நிழலில் நின்றிருக்கிறோம் என்று தவிக்கின்றோம், துடிக்கின்றோம்.

கர்மவீரராய் வாழ்ந்து காட்டிய உம்மை நன்றியில்லாமல் தோற்க விட்டனர் எம் முன்னோர்.
முன்னோர் செய்த பாவம் நாங்கள் இன்று இந்த நிலையில்
ஐயா மன்னியுங்கள்.. மீண்டும் எங்களிடம் வந்து விடுங்கள்
தத்தளிப்பது நாங்கள் மட்டுமல்ல, நீங்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழகமும்தான்!

- ஆகர்ஷினி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This reader has prayed that late leader Kamarajar should come back to Tamil Nadu to save it from all the issues.
Please Wait while comments are loading...