For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி பிரதமர் ஆக தமிழகத்தில் அமோக ஆதரவு: தந்தி டிவி கருத்துக்கணிப்பு

By Siva
|

குமரி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.

தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக குமரி, நாகப்பட்டிணத்தில் கருத்துக்கணிப்பை நடத்தி முடித்துள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம். (தந்தி டிவி ஒவ்வொரு தொகுதியிலும் கருத்துக்கணிப்பை முடித்தவுடன் அதன் விவரங்களை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து அளிப்போம்.)

காங்கிரஸ் கூட்டணி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?

காங்கிரஸ் கூட்டணி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

குமரி: ஆமாம் - 28%, இல்லை - 72%

நாகை: ஆமாம் - 21%, இல்லை - 79%

மீண்டும் வாக்களிப்பீர்களா?

மீண்டும் வாக்களிப்பீர்களா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வரும் தேர்தலில் மீண்டும் வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

கன்னியாகுமரி: ஆமாம் - 39%, இல்லை - 61%

நாகை: ஆமாம் - 15%, இல்லை - 85%

அடுத்த பிரதமர்?

அடுத்த பிரதமர்?

அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

குமரி: ஜெயலலிதா- 26%, ராகுல் காந்தி - 25%, நரேந்திர மோடி - 48%, மற்றவர்கள்- 1%

நாகை: ஜெயலலிதா- 6%, ராகுல் காந்தி - 13%, நரேந்திர மோடி - 77%, மற்றவர்கள்- 4%

இந்தியாவை மீட்பவர் யார்?

இந்தியாவை மீட்பவர் யார்?

தற்போதைய சிக்கலில் இருந்து இந்தியாவை மீட்கக் கூடிய திறன் படைத்தவர் யார்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,

குமரி: மோடி - 64%, ராகுல் - 30%, ஜெயலலிதா - 5%, மற்றவர்கள்- 1%

நாகை: மோடி - 78%, ராகுல் - 13%, ஜெயலலிதா - 7%, மற்றவர்கள்- 2%

தேசிய கட்சியில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

தேசிய கட்சியில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,

குமரி: பாஜக - 60%, காங்கிரஸ் - 36%, கம்யூனிஸ்ட் - 4%

நாகை: பாஜக - 72%, காங்கிரஸ் - 25%, கம்யூனிஸ்ட் - 3%

மாநிலக் கட்சி

மாநிலக் கட்சி

மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?

குமரி: அதிமுக - 78%, திமுக - 13%, தேமுதிக - 2%, மதிமுக - 4%, பாமக- 3%

நாகை: அதிமுக - 54%, திமுக - 33%, தேமுதிக - 8%, மதிமுக - 4%, பிற - 1%

ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா?:

ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா?:

ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,

குமரி: ஆமாம்- 34%, இல்லை - 62%, வாய்ப்பு இருக்கலாம் - 4%

நாகை: ஆமாம்- 32%, இல்லை - 47%, வாய்ப்பு இருக்கலாம் - 21%

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?

ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,

குமரி: தெரியும்- 53%, தெரியாது - 47%

நாகை: தெரியும்- 83%, தெரியாது - 17%

ஆம் ஆத்மிக்கு வாக்கு

ஆம் ஆத்மிக்கு வாக்கு

ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?

குமரி: ஆமாம் - 2%, இல்லை - 98%

நாகை: ஆமாம் - 9%, இல்லை - 91%

English summary
According to the survery conducted by Thanthi TV in Kanyakumari and Nagapattinam, people support BJP candidate Modi for the PM post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X