கயிறு ஏறியதாகப் பொய்.. உடல் தகுதித்தேர்வில் முறைகேடு.. 3 போலீசார் சஸ்பெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: போலீஸ் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3 Police officers Arrested in Chennai Central Station-Oneindia Tamil

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பணிகளுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு முடிவடைந்தது.

TNUSRB exam thillumullu, 3 police suspended

இதனைத் தொடர்ந்து, உடல்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் ஆகியவை சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 15 மையங்களில் கடந்த 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 9ம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வில் கயிறு ஏறாத 4 பேரைக் கயிறு ஏறி தேர்ச்சிப் பெற்றுவிட்டதாகக் கூறி டிஐஜியிடம் கையெழுத்து வாங்க 3 போலீசார் முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், போலீசார் முருகேசன், பாலமுருகன், சரவணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three police were suspended for alleging malpractice in TNUSRB exam.
Please Wait while comments are loading...