ஜீயருக்கு எதிராக த.பெ.தி.க உண்ணும் போராட்டம்... கோவையில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜுயருக்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்- வீடியோ

  கோயம்புத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்கக் கோரி சடகோப ராமானுஜர் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஜீயரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  TPDK conducted eating protest against Sadagopa Ramanuja Jiyar

  கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதகலவரத்தை தூண்டும் விதமாக ஜீயர் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

  ஏற்கனவே கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்ட நிலையில் திட்டமிட்டே போராட்டத்தை ஜீயர் தூண்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் இந்த உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும் த.பெ.தி.கவினர் மாட்டுக்கறி பிரியாணியை கொடுத்தனர். ஜீயர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும் வரையில் உண்ணும் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TPDK conducted agitation against Jiyar at Coimbatore condemning Jiyar's protest and raised slogans against him that he is unnecessarily raising religious issues in Tamilnadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற