ஜெ. ஒரு குற்றவாளி.. அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது.. வழக்கு தொடர்ந்தார் டிராபிக் ராமசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

Traffic Ramasamy opposed Jayalalithaa's house as a memorial home

இதைத்தொடர்ந்து அவரது வீட்டை அரசுடைமையாக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்கான மதிப்பீடு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற டிராபிக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Social activist Traffic Ramasamy oppossing Jayalalitha's Poes garden house to be a memorial house. Traffic Ramasamy filed a case in Chennai high court against this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற