சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊதிய உயர்வு கோரி சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2.57 சதவீதம் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க கோரி கடந்த 6 மாதங்களாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 23 முறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தகைய ஊதியத்தை தர அரசு மறுத்துவிட்டது.

Transport Workers protest in Chennai Chepauk

இதையடுத்து கடந்த 5 தினங்களாக தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகளை தற்காலிக டிரைவர்கள் இயக்கி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Transport Workers protest in Chennai Chepauk

மேலும் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport Workers protest in Chennai Chepauk demanding salary hike and pending amount for Retired persons.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X