கத்தியுடன் சீமான்? திருச்சி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படையினர் சோதனையில் நடந்ததுதான் என்ன?
திருச்சி: திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடன் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது, கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் "கீ செயினில் இருந்த நகவெட்டியை பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை" என மறுத்ததாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு.

இந்த வழக்கில் சீமான், நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நேற்று கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சீமான் நேற்று ஆஜராகவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இதனால் சீமான் நேற்று திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் சீமானிடம் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, சீமானிடம் இருந்த ஒரு பொருளை பாதுகாப்புப் படையினர் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. விமானத்தில் பயணித்த சீமான் ஏன் கத்தியுடன் பயணித்தார்? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில், திருச்சி விமானநிலையத்தில் என் வாகனத்தின் கீ செயினில் இருந்த நகவெட்டியை பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என திரும்ப கொடுக்கச் சொன்னார்கள் !
அதை வானூர்தி நிலைய ஊழியரிடம் கொடுத்து வெளியே நிற்கும் கட்சி உறவுகளிடம் கொடுக்கச் சொன்னேன் என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications