பூவால் அடித்த தொண்டர்கள்.. வெட்கப்பட்டு கேள்வி கேட்ட தினகரன்.. நச்சென்று வந்த பதில்!

சென்னை: ஆர்கே நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது தினகரன் மீது வாக்காளர்கள் பூக்களை வீசினர். அதற்கு வாக்குகளை வீசுவீர்கள் என்று பார்த்தால் பூக்களை தூவுகிறீர்களே என்று தினகரன் வெட்கப்பட்டு கொண்டே கேட்டார். அதற்கு நச்சென்று வாக்காளர் ஒருவரிடம் வந்த பதிலால் தினகரன் மகிழ்ச்சி அடைந்தார்.
ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தினகரன் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் நேற்று இரவு அந்த தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது வாக்காளர்கள் அவர் மீது மலர்த்தூவி வரவேற்றனர்.

பூவால் அடிக்கிறீங்களே
வாக்காளர்களுக்கு மத்தியில் தினகரன் பேசுகையில், வாக்காள அடிப்பீங்கன்னு பார்த்தா இப்ப என்னை பூவால அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களே என்றார்.

முகப்பு விளக்கம்
அதற்கு வாக்காளர் ஒருவர் இன்னிக்கு பூவால அப்பாலிக்கா வாக்காள என்று ஒரு குரல் எழுந்தது. இதனால் டிடிவி தரப்பின் முகம் முகப்பு விளக்கை விட மிகவும் பிரகாசமாகவும் தினகரன் தனக்கே உரிய அந்த புன்னகையுடனும் காட்சியளித்தார்.
|
தினகரனுக்கு ஆதரவு
பல்வேறு கருத்து கணிப்புகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவார் என்று கூறுகின்றனர் .இதையே உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும் கூறுகின்றன.

குமரியின் குரல்
குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்காததும், காணாமல் போன மீனவர்களை இதுவரை மீட்காததும் ஆர்கே நகரில் எதிரொலிக்கிறது. அத் தொகுதியில் ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய இடங்களில் மீனவ மக்கள் வசிப்பதால் குமரி மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க இந்த தேர்தலை வாக்காளர்கள் துருப்புச் சீட்டாக பயன்படுத்துவர் என்றே தெரிகிறது.