டிடிவி தினகரன் ஒரு திருடன்... அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் ஒரு திருடன் என்றும் அவரது வித்தையை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி தலைமையிலான ஆட்சி இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு சென்றுவிடும் என்று டிடிவி தினகரன் சூளுரைத்தார்.

TTV Dinakaran is a thief, says Minister Jayakumar

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பேசுகையில், வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு தான் போக வேண்டும். ஆனால் தினகரனோ மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி என்றார்.

இதேபோல் மாமியார் வீட்டுக்கு யார் செல்வது என்பது குறித்து வாக்குவாதம் மீண்டும் தொடர்ந்து உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தவர் எடப்பாடி என்று டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், டிடிவி தினகரன் ஒரு திருடன், அவரது வித்தையை யாரும் நம்ப மாட்டார்கள் என்றார்.

இந்த பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் குறித்து ஒரு பழமொழியையும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar says that TTV Dinakaran is a thief and the people of TN wont believe TTV Dinakaran's tactics.
Please Wait while comments are loading...