சந்திக்க மறுத்த சித்தி... பெரும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார் டிடிவி தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூர் சென்றிருந்த டிடிவி தினகரன் அவரை சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குமிக்கவர் என்று கூறப்படும் இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் பெங்களூரில் உள்ள சசிகலாவை பார்ப்பதற்காக சென்றார். ஆனால் அவரை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

பார்க்க விரும்பாத சசிகலா

பார்க்க விரும்பாத சசிகலா

உண்மையில் சசிகலாதான், தினகரனைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், தான் சிறைக்கு வந்த பிறகு தினகரன் நடந்து கொண்ட விதம் அவரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

தன் இஷ்டம்

தன் இஷ்டம்

எல்லா விஷயத்தையும் அவர் தன் இஷ்டத்திற்கு நடந்து கொண்டதால் சசிகலா பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பெரும் வேதனையில் இருந்து வந்தார். கடைசியில் இரட்டை இலை முடக்கம் அவரை சோகத்திற்குள்ளாக்கி விட்டது.

சந்திக்க மறுப்பு

சந்திக்க மறுப்பு

இதனால்தான் தன்னைத் தேடி வந்த தினகரனை சந்திக்க அவர் விரும்பவில்லை. இதனால் சசிகலாவை தினகரால் சந்திக்க முடியவில்லை. இதனிடையே, அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று இரவு திடீர் ஆலோசனை நடந்தது.

திரும்பினார்

திரும்பினார்

அதில் டிடிவி தினகரனுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் சசிகலாவை சந்திக்காமல் டிடிவி தினகரன் சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran returned from Bengaluru to Chennai. Important decision will be taken regarding ADMK's two teams joining.
Please Wait while comments are loading...