2 சிறுமிகள் பலியானதற்கு அரசின் அலட்சியமே காரணம் - டிடிவி தினகரன் பொளேர்

Subscribe to Oneindia Tamil
  அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

  சென்னை : கொடுங்கையூரில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் சிறுமிகள் இருவர் மின்சாரம் தாக்கி பலியாகினர். அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

  சென்னை கொடுங்கையூரில் எம்.ஜி.ஆர் நகரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மிதித்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  பலியான சிறுமிகள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மின் கம்பி அறுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததன் அலட்சியத்தாலேயே சிறுமிகள் பலியாகி உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

  இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

  ட்விட்டரில் தினகரன் பதிவு

  இந்த சம்பவம் குறித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

  மனவேதனை

  அதில், நாம் ஏற்கனவே அச்சப்பட்டது போல எடப்பாடி அரசின் அலட்சியத்தால் கொடுங்கையூரில் சிறுமிகள் இருவர் பலியாகி இருப்பது அறிந்து மனவேதனை அடைந்தேன்.

  குடும்பத்தினருக்கு இரங்கல்

  சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தினகரன்.

  நடவடிக்கை தேவை

  இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran Shared his condolence in twitter, towards the Child's family who lost their lives in electrocution that happend in Kodungaiyur early this Morning .

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற