For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1 லட்சம் வாக்காளர்கள்.. ஓட்டுக்கு ரூ.5000.. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பக்கா ஸ்கெட்ச்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு ஓட்டுக்கு ரூ.5000 பட்டுவாடா செய்ய அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கேநகரில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 696 வாக்காளர்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இவர்களில் சுமார் 2 லட்சம் பேராவது வாக்குச்சாவடிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிப்போரில் குறைந்தது 1 லட்சம் பேர் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தாலும் வெற்றி நிச்சயம்.

தினகரன் டீம்

தினகரன் டீம்

இந்த பார்முலாவை கையில் எடுத்துள்ளது தினகரன் டீம் என்கிறார்கள் விவரம் அறிந்தோர். இதற்காக 1 லட்சம் வாக்காளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து தலா 5000 ரூபாய் சப்ளை செய்தால் 50 கோடி ரூபாய் செலவில் வெற்றிக் கனியை பறித்துவிடலாம் என்பது அவர்கள் கொடுக்கும் ஐடியாவாம்.

வெற்றி கிடைக்குமே

வெற்றி கிடைக்குமே

பணம் வாங்கியவர்களில் 80 ஆயிரம் பேர் வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக வாக்களித்தாலும், தினகரன் வெற்றி உறுதி என்பதால் இந்த பார்முலாவை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக பணம் பெற்றுவிட்டு மாற்றி வாக்களிக்காத மக்களை மட்டும் தேர்ந்தெடுத்து பண சப்ளை நடைபெறுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தொகுதிக்கு வெளியே

தொகுதிக்கு வெளியே

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, பன்னீர் அணி, திமுகவினரின் கெடுபிடி காரணமாக அம்மா கட்சியினர் வெளிப்படையாக பணம் சப்ளை செய்ய முடிவதில்லை. இப்படி பணம் சப்ளை செய்த கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே தொகுதிக்கு வெளியே வைத்து பணம் சப்ளையாகிறதாம்.

தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

பண சப்ளை குறித்த தகவல் ஓபிஎஸ் அணி, திமுகவுக்கும் போயுள்ளது. எனவே அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரங்களை சேகரித்து அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சிலரும் பணப்பட்டுவாடா நடக்கவிடாமல் தடுக்க தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
TTV Dinakaran supporters allegedly giving money to the voters in RK Nagar by poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X