எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்காதீங்க.. தினகரனைப் பார்த்துக் கத்துக்கங்க..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்காதீங்க.. தினகரனைப் பார்த்துக் கத்துக்கங்க..!- வீடியோ

  சென்னை : கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தில் நடந்த வருமான வரி சோதனையால் அவரது குடும்பத்தினர் தலை கிறுகிறுத்து போயிருக்கும் நிலையில் டிடிவி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூலாக குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

  கடந்த 9ம் தேதி சசிகலா குடும்பத்தை குறி வைத்து தமிழகத்தில் நடத்தப்பட்ட "ஸ்ரீனி வெட்ஸ் மகி" வருமானவரியின் ரெய்டு கடந்த 5 நாட்களாக களைகட்டியது. ஒரு வழியாக நேற்று மாலையுடன் இந்த திருமண ஏற்பாட்டிற்கு சுபம் கார்டு போடப்பட்டது. சோதனை முடிந்தாலும் ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ள அதிகாரிகள் சசிகலா குடும்பத்தினர், உதவியாளர்கள், தொழிலதிபர்கள் என்று சுமார் 355 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

  வருமான வரி சோதனை நடந்த முதல்நாளே கூலாகத் தான் இருந்தார் தினகரன். தனது வீட்டிற்கு வருமான வரி அதிகாரி வந்து சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்தார்.

   கூலாக இருந்த தினகரன்

  கூலாக இருந்த தினகரன்

  அதோடு தொடர்ந்து 5 நாட்களாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்து வந்தார். எவ்வளவு வேண்டுமானாலும் சோதனை நடத்தட்டும், அதற்கு உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் தருவார்கள்.

   குற்றச்சாட்டு

  குற்றச்சாட்டு

  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான கார் நிறுவனத்திடம் இருந்தே வருமான வரி சோதனைக்கான அனைத்து கார்களும் புக் செய்யப்பட்டிருக்கின்றன என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தினகரன் முன் வைத்தார்.

   கிறுகிறுத்த சசி குடும்பம்

  கிறுகிறுத்த சசி குடும்பம்

  5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை கடைசியில் விவேக், கிருஷ்ணப்ரியா வீட்டில் மட்டும் நடந்தது. இதனால் தினகரன் கடந்த 2 நாட்களாகவே தெம்பிழந்து தான் காணப்பட்டார் என்று சொல்ல வேண்டும்.

  தினகரன் வாழ்த்து

  சுழன்றடித்த வருமான வரி சோதனையால் சசிகலா குடும்பமே கிறுகிறுத்து தான் உள்ளது. ஆனால் இத்தனை தணகளத்திலும் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் இன்றைய சூழ்நிலையில், உண்மை எது, பொய் எது என்பதை குழந்தைகள் பிரித்துணர்ந்து செயலாற்றிட பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழி நடத்திட வேண்டும். குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV. Dinakaran wished all childrens a happy childrens day amidst of Income tax raid storm around his family members were over yesterday evening.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற