கருப்பு என கூறி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டாய்... #Demonetisation

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உயர்ரக நோட்டுகளை ஒழிப்பதாக கூறி பொதுமக்களை மத்திய அரசு இன்னலுக்கு ஆளாகியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் நின்றிருந்தோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆன பின்பும் இன்னும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

இதுகுறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் அனுப்பிய கருத்துகளை பார்ப்போம்.

கலர் கலராய் போட்டியாளர்கள்

கருப்பு என கூறி எங்கள் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டாய், இன்றோ பல வண்ணங்களில் உனக்கு போட்டியாளர்கள்.

கருப்பு பணம்

கருப்புபணம் தேடி தேடி கலர் கலர் பணம் கலக்கலாய் கண் முன்னே. ஆயினும் கருப்புபணம் எண்ணாவானதோ.?

யாரு வச்சுருக்கா

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிந்சாகனும் சாமி, நீங்க சொன்ன அந்த #கருப்புபணம் இப்ப யாரு வச்சிருக்க! யாரு வச்சிருக்கா!

அரசின் ஒரே திட்டம்

உலகத்துலயே கருப்பை வெள்ளையா மாத்தா அரசே அறிவிச்ச ஒரே திட்டம் #DeMoDisaster தான்.

அவலம் நடந்தது

அம்மாவை கடிந்த பின்பு அஞ்சலகத்தில் செலவுக்கு காசு அனுப்பிய அவலம் நடந்தேறிய நாட்கள் #DeMoDisaster

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans shares their comments on Demonetisation how the people affected.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற